துபாய்:

கோவிட் -19 வைரஸ் தாக்குதல் காரணமாக, மந்தநிலை நிலவி வருவதையடுத்து, எமிரேட்ஸ் விமான நிறுவனம். தங்கள் ஊதியம் அல்லது ஊதியம் பெறாத விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஊதியம் பெறாத விடுப்பில் செல்லுங்கள் என்று எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஊழியர்கள் தாங்களாகவே விடுப்பு எடுத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளோம். விடுப்பு எடுப்பதா? அல்லது வேண்டாமா? என்பதை ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிறுவனத்தில் பணியாற்றும் 21,000க்கும் மேற்பட்ட கேபின் குழுவினர் மற்றும் 4,000 விமானிகள் ஆகியோருக்கு இமெயில் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இமெயிலில், கோவிட் -19 வைரஸ் பாதிப்பு காரணமாக எங்கள் நிறுவனம், அளவிட முடியாத மந்த நிலையை சந்தித்துள்ளது. இதனாலேயே ஊழியர்கள் விடுப்பு எடுத்து செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று கேட்டு கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கேத்தே பசிபிக் ஏர்வேஸ் ஊழியர்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை, ஊதியம் பெறாத விடுப்பு எடுக்க ஒப்புக் கொண்டனர், தலைமை நிர்வாக அதிகாரி அகஸ்டஸ் டாங்கின் வெளியிட்ட குறிப்பில், விமானம் கொரோனா வைரஸின் தாக்கத்துடன் போராடுகையில், ஊழியர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால், எமிரேட்ஸ் விமான நிறுவனம்,சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. பெய்ஜிங்கைத் தவிர, ஈரானுக்கான விமானங்களை நிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் கொரோனா வைரஸின் மையமாக ஈரான் உள்ளது, இதில் 43 பேர் இறந்தனர் மற்றும் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பு, துபாய் மற்றும் சீனா இடையே அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டின் டி.எக்ஸ்.பி போக்குவரத்து அறிக்கையின் புள்ளிவிவரங்கள், 2019-ஆம் ஆண்டில் வெளியான சீனா மற்றும் ஹாங்காங்கின் நாடுகளை சேர்ந்த 36 லட்சத்து, 81 ஆயிரத்து 896 வாடிக்கையாளர்கள், விமான நிலையத்தின் வழியாக பயணித்ததை உறுதிப்படுத்தியது, இது ஆண்டுக்கு ஐந்து சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.

கூடுதலாக, 2019-ஆம் ஆண்டில், சீனாவில் இரண்டு புதிய முனையங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவின் கிழக்கு பகுதியில் கிங்டாவோ மற்றும் சியான் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை, வாரத்திற்கு 90 விமானங்கள், 13 வழித்தடங்களிலில் ஆறு விமானங்கள் பயணிக்க தொடங்கின.

உம்ரா பயணிகள் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, உரிய அனுமதி பெறும் வரை 24 நாடுகளை சேர்ந்த பயணிகளை சவுதி அரேபியாவுக்கு ஏற்றி செல்ல மாட்டோம் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் இருந்து சவுதி அரேபியாக்கு பயணம் செய்ய விசா பெற்றவர்களையும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, வளைகுடாவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வெகுவாக சரிந்தன, இது கடந்த வாரம் உலகளாவிய வர்த்தக நிறுவனங்களையும் தாக்கியது. எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 50 டாலருக்கும் குறைந்து விட்டதால், ஜி.சி.சி.யில் உள்ள ஏழு நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.