சென்னை:

மிழகத்தில் பெரியார் சிலைகள் உடைத்து அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன், இன்று விழுப்புரம் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக  கூறினார்.

மேலும்,  பெரியார் சிலை மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரியாமலும், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவே எச்.ராஜா அப்படி பேசியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழகத்தில் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, தனது பதிவுக்கு  மன்னிப்பு கோரியுள்ளார் .