ஐ.நா. சபையின் உதவிபொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த சத்யா திரிபாதி நியமனம்

ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பொருளாதார வல்லுநரான  சத்யா திரிபாதி 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்தவர். ஏற்கனவே ஐ.நா. சபையில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் பல்வேறு  பதவிகளில் இருந்து வந்துள்ளார்.  வனங்களை அழிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா. சிறப்பு மையத்தின் இயக்குநராகவும், நிர்வாகத் தலைவராகவும் சத்யா திரிபாதி பதவி வகித்துள்ளார்.

அதுபோல,  ர்வதேச பொருளாதார அமைப்புகளிலும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நீடித்த வளர்ச்சி, மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், திட்டங்களிலும் அவர் பங்கு சத்யா திரிபாதி பங்குபெற்று பணியாற்றி உள்ளார்.

தற்போது அவரை ஐ.நா. சபையின் உதவிபொதுச் செயலாளராக நியமனம் செய்து  ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்து உள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான சத்யா திரிபாதி வணிகவியல் பாடத்தில் இளநிலை, முதுநிலை படித்தவர். மற்றும் பல கவுரவ பட்டங்களையும் பெற்றவர். அத்துடன்  ஒடிஸாவில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புகளையும் முடித்தவர்.