வாரம் ஒரு சாதியினர் கழிவு அள்ளட்டும்! : சத்யராஜ்


சென்னை

வ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்கள் கழிவுகளை அள்ள வேண்டும் என்று  என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜ், நீண்டகாலமாகவே சமூக அவலங்கள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருபவர். பேராசிரியர் சாதி வெறியால் திட்டியதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட கவின் கலை கல்லூரி மாணவனுக்காவும் சமீபத்தில் சத்யராஜ் குரல் கொடுத்தார்.

தற்போது, வாராவாரம் முறைவைத்து அனைத்து சாதியினரும் கழிவு அள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சத்யராஜ்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, “  இன்றைய காலகட்டத்திலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்கிறது.  நாம், நமக்கு மோஷன் பரிசோதனைக்காக மலத்தை எடுப்பதற்கே தயங்குகிறோம். ஆனால், குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்த மக்கள், அனைவரின் மலத்தையும் இன்னும் அள்ளிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  இதற்கு இன்னும் எந்திரம் கூட கண்டுபிடிக்கவில்லை.

இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதற்கு,  ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சாதியினர்  கழிவு தொட்டில் இறங்க வேண்டும் என்று ஒரு அவரச சட்டம் போட வேண்டும்.   உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு தனியாக கருவி ஒன்று கண்டுபிடித்துவிடுவார்கள்” என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.