Saudi Arabia and Israel Will Be on Itinerary of Trump’s First Foreign Trip

 

அமெரிக்க அதிபர் டிரம்ப், சவூதி அரபேியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு தனது வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொள்கிறார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டெனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயண திட்டத்தை அறிவித்துள்ளார்.

 

அதிபராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக சவூதி அரேபியா, இஸ்ரேல், மற்றும் வாடிகன் செல்ல திட்டமிட்டுள்ளேன் என்றார். இதன் மூலம் டிரம்பின் முதன் வெளிநாட்டு பயணம் குறித்து அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது.

மே 19ம் தேதி தனது வெளிநாட்டுபயணத்தை தொடங்கும் டிரம்ப், 24ம் தேதி ப்ரஸல்ஸில் நடைபெறும்  நேட்டோ மாநாடு, பெல்ஜியத்தில் நடக்க உள்ள ஜி-7 மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. பயணத்தின் முதல் கட்டமாக ரியாத் செல்லும் ட்ரம்ப், பின்னர் இஸ்ரேல் செல்கிறார். அப்போது பெத்தலஹேம் சென்று பாலஸ்தீனிய அதிபர் அப்பாசைச் சந்திக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இம்மாத இறுதியில் தனது வெளிநாட்டுபயணத்தை தொடங்கும் டிரம்ப், முன்னதாக பெல்ஜியத்தில் நடக்க உள்ள ஜி-7 மாநாடு, நேட்டோ மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.