சவுதி அரேபியா தலைமையில் ஏமன் அரசு – கிளர்ச்சியாளர்கள் அமைதி ஒப்பந்தம்

மன்

வுதி அரேபியா தலைமையில் ஏமன் அரசுக்கும் அந்நாட்டில் தென் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அறிவிக்கபடுள்ளது.

கடந்த 2015 முதல் ஏமன் நாட்டின் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதி மற்றும் ஷ்யா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.    சவுதி அரேபியா அதிபருக்கு ஆதரவாகவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.  அத்துடன் அரபு அமீரக ஆதரவுடன் ஏமன் நாட்டின் தென் பகுதியில் பிரிவினை வாதிகள்  போரிட்டு வருகின்றனர்.

இதனால் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.  நாட்டில் லட்சக்கணக்கானோர் ப்சி மற்றும் பட்டினியால் வாடி வருகின்றனர்.  இதையொட்டி சவுதி அரேபிய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஏமன் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளது.

இது குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், “கடந்த நான்கு வருடங்ளாக ஏமனில் தொடரும் போருக்கு அரசியல்ரீதியான முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.   ஏமனில் இந்த ஒப்பந்தம் மூலம் புதிய சூழல் உருவாகும்.  என்றும் சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கிறது. நம் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான நாள்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: inland war, Peace accord, protesters, saudi arabia, Yemen, அமைதி ஒப்பந்தம், உள்நாட்டுப் போர், ஏமன்:, கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா
-=-