ரியாத்: முஸ்லீம் அல்லாத ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல்  செய்ததற்காக சவூதி அரேபியா தனது சொந்த நாட்டு குடிமகனை கைது செய்திருக்கிறது.
முஸ்லீம் அல்லாத ஆசிய வெளிநாட்டவர் தொழிலாளியை துஷ்பிரயோகம் செய்த ஒரு குடிமகனை கைது செய்ய சவுதி அதிகாரிகள் உத்தரவிட்டதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, ஒரு முஸ்லீம் அல்லாத வெளிநாட்டவர் ஒரு சவுதி நாட்டவரால் அவமதிக்கப்படுவதை போன்றும், கேலி கிண்டலடிக்கப்படுவதாகவும்  சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களின் உரிமைகளை அரசானது உன்னிப்பாக கவனிக்கிறது. அத்தகைய சம்பவங்களின் போது, கூறப்படும் பொய்களை பொருட்படுத்தாமல் அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.