சவுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி

ரியாத்

வுதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சவுதி அரேபியாவில் இதுவரை சுமார் 3.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 6200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.   நேற்று அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டுள்ளது..

இதையொட்டி ஒரு சில ஊடகங்கள் தவறுதலாக சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு நாட்டில் முதல் தடுப்பூசி போடப்பட்டது எனச் செய்திகள் வெளியிட்டிருந்தன.  அதை அரசின் செய்தித் துறை திருத்தி அவருக்கு முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.