சவுதி அரச குடும்பத்தை விமர்சித்த பிரபல மதகுரு கைது

ரியாத்:

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதாரம், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அரச குடும்பத்தினரில் ஊழல் குறித்து பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி விமர்சனம் செய்து வந்தார். வன்முறையை தூண்டியதாக சபர் அல்-ஹவாலி, அவரது மகன்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை. வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். சவுதி அரச குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.