H-1B விசா விதிகளை மாற்றிய டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு இந்தியர்களின் வாய்ப்புகளைப் பாதித்தாலும், இதுவரை வரியில்லாத நாடாக இருந்த சவுதி அரேபியா, இப்போது மதிப்புக்கூட்டு வரி அறிமுகப்படுத்திய பிறகு அங்கு வாழும் சுமார் 3 மில்லியன் இந்தியர்களின் சேமிப்பைக் கடுமையாக பாதித்துள்ளது, அதனால் அவர்கள் சேமிப்புக்கு குறைவான வருமானத்தை பெற்று, அங்குள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் குறைந்துவிடும்.

அமெரிக்காவில், H-1B விசா வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை இரு மடங்காக்க அதாவது தற்போதைய $60,000 இருந்து $130,000 ஆக உயர்த்த ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தடவை இதை கேட்கும் போது நல்லதாக தெரிந்தாலும், இந்த நடவடிக்கை குறைந்த செலவில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்களைத் தடுக்கும் முயற்சியாக எடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டின் உயர்-திறன் நாணயம் மற்றும் நேர்மை சட்டத்தை அறிமுகப்படுத்திய கலிபோர்னியா காங்கிரஸ் உறுப்பினர் ஜோ லோஃப்க்ரென் அவர்களின் படி, “இது அதிகாமான ஊதியம் கொடுக்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சந்தை-அடிப்படையிலான (market-based) தீர்வை வழங்குகிறது. இது அமெரிக்க முதலாளிகள், அமெரிக்க ஊதியங்களைக் குறைத்து வெளியிலிருந்து வேலைகளைப் பெறும் நிறுவனங்களுக்கான சலுகைகள் நீக்கி, அவர்களுக்குத் தேவைப்படும் திறமையைப் பெற வழிவகுக்கும். ”

மேலும், செனட்டர் ஷெர்ராட் பிரவுன், H-1B விசா மற்றும் L-1 விசா சீர்திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப் போவதாக செனட்டில் அறிவித்துள்ளார். இது H-1B மற்றும் L-1 விசா திட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்து அமெரிக்க தொழிலாளர்களுக்கும் விசா வைத்திருப்பவர்களுக்கும் அதிகமான பாதுகாப்பு அளிக்கும். “அமெரிக்கர்களின் நியாயமான ஊதியத்தைக் கொடுக்க மறுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தும் பெருநிறுவனங்களை அனுமதிக்கும் மோசடி மற்றும் முறைகேடு செய்பவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று பிரவுன் கூறினார்.

சவுதி அரேபியாவைப் பொருத்த வரை, சுமார் 3 மில்லியன் இந்தியர்கள் அங்கு வாழ்ந்து, வேலைப் பார்த்துக் கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவிலுள்ள தங்கள் வீட்டிற்கு சுமார் $ 10.51 பில்லியன் அனுப்புகிறார்கள். இதுபோல் உலகம் முழுவதிலிருந்தும் மொத்த $ 70 பில்லியன் இந்தியாவிற்கு வருகிறது. இதுவரை வரி இல்லா நாடாக இருந்து சவுதி, இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மதிப்புக்கூட்டு வரியினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, இந்தியர்கள் தங்கள் வீட்டிற்கு குறைவான சேமிப்பை தான் அனுப்ப முடியும்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரும் அரபு பகுதியின் மிகப் பெரிய பொருளாதார நாடுமான சவூதி அரேபியாவில் ஏற்பட்ட எண்ணெய் சரிவைத் தொடர்ந்து, எரிபொருள் மற்றும் பயன்பாடுகள் மானியங்களை முன்னொருபோதும் இல்லாத வகையில் ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC) முடிவெடுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இப்போது அரபு முடியரசு ஒரு சில பொருட்கள் மீது 5 சதவீத வரி விதிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த வரி ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அனைத்து GCC நாடுகள் முழுவதும் செயல்படுத்தப்பட தயாராக உள்ளது.
சவுதி அரேபியா, கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த போது, ஜூலை 2017 முதல், வெளிநாடுகளிலிருந்து குடியேறிய தொழிலாளியைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் கட்டணம் விதிக்குமாறு ஏற்கனவே ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

அந்த திட்ட்த்தின் படி, இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்துள்ள ஒவ்வொரு நபருக்கும் (மனைவி அல்லது குழந்தைகள்), பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 100 சவுதி ரியால்கள் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை, வெளிநாடுகளிலிருந்து குடியேறி வேலை விசாவில் சவுதியில் தங்கியிருப்போர், இக்வாமா என்ற குடியிருப்பு அனுமதியை புதுப்பிக்கும் நேரத்தில் செலுத்த வேண்டும். இக்வாமா பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. இந்த கட்டணம் 2018 இல் 200 சவுதி ரியால்களாகவும் அதற்கு அடுத்த ஆண்டு 300 சவுதி ரியால்களாகவும் அதிகரிக்கப்படும்.