சவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்….பெண்கள் பங்கேற்பு

ரியாத்:

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. இது தற்போது ஒன்றொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. சினிமாவுக்கு செல்லவும், கார் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மன்னர் முகமது பின் சல்மான் முடிசூடிய பின்னர் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த வகையில் சவுதி வரலாற்றிலேயே முதன் முறையாக ரியால் கார்ல்டன் ஓட்டலில் ஃபேஷன் வாரம் கொண்டப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் வண்ண மயமான ஆடை அலங்காரம், சிகை அலங்காரத்துடன் பெண்கள் கலந்துகொண்டனர்.

இங்கு ஃபேஷன் வாரம் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடு மிகுந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.