Random image

சவுதி அரேபியா:  பொதுமக்களால் வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம்

சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவில் தினமும் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இனி சவுதி அரேபியாவில் வீண்டிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ந்த சட்டமானது உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது குறித்த சட்டத்தை மீறும்  நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.