சவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி?

லாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று  வருகிறது. இதனால் அங்கு சட்டப்பூர்வமாக  காதலர் தினத்திற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி மகிழும் நிலையில்,  இஸ்லாமிய நாடான சவூதியில்  காதலர் தினம் அணுசரிக்கப்படுவதில்லை, அது சம்பத்தப்பட்ட சிவப்பு ரோஜா, வாழ்த்து மடல்கள் விற்பனை செய்யவும் தடை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த தடை அங்கு தொடர்ந்து வருகிறது…

ஆனால், சமீபகால ஆண்டுகளில் பல்வேறு பழைய கால சட்டங்களை விலக்கியும், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளையும் அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், காதலர் தினத்துக்கும் அனுமதி வழங்கும் என அந்நாட்டு இளைஞர்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே புத்தாண்டு தினத்தன்று, கடந்த  ஜனவரி 31, 2020 அன்று  இரவு, பல இளஞ்ஜோடிகள் ஆங்காங்கே குழுமியிருந்தாக கூறப்படுகிறது. அப்போது ஜோடியாக  எடுக்கப்பட்ட படங்கள் அதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தற்காலை நடைமுறைக்கேற்க  காதலர் தினத்தை கொண்டா சவூதி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடந்த  2018 ஆம் ஆண்டு, காதலர் தின விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மக்காவின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  ஷேக் அகமது காசிம் அல்-காம்டி, காதலர் தின கொண்டாட்டம் உண்மையில் இஸ்லாமியத்திற்கு முரணானது அல்ல என்று அறிவித்தார் போதனைகள். அவரைப் பொறுத்தவரை, அன்பைக் கொண்டாடுவது ஒரு உலகளாவிய நிகழ்வு மற்றும் முஸ்லிம் அல்லாத உலகத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சவூதி அரேபியா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, தனது நாட்டில்  கொண்டாட அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி