சவுதி அரேபியா:
கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவுக்கு உம்ரா எனப்படும் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டின் ஏதாவது ஒரு நாளில் அந்த புனிதப் பயணம் தொடங்கப்படலாம். கிராண்ட் மசூதியில் 75 சதவீதம் வரை மக்களை அனுமதிக்க சவுதி முடிவெடுத்துள்ளது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் தொடக்கத்தில் மெக்கா மற்றும் மதினா நகரங்களில் மக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆயிரம் மக்கள் தினசரி வழிபாட்டில் பங்கேற்றுவருகின்றனர். அடுத்தகட்டமாக கிராண்ட் மசூதியில் 20 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.