சவுதி: பெண் சமூக ஆர்வலருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்பு

சவுதியில் பெண் சமூக ஆர்வலருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சவுதியின் கிழக்கு மாகாணங்களில் போராட்டக்காரர்களுக்கு உதவியதாக ஷியா பிரிவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

saudi-arabia-

சவுதியின் கிழக்கு மாகாணங்களில் அவ்வபோது ஷியா மற்றும் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லீம்களிடையே போரட்டம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலான ஷியா முஸ்லீம்கள் கிழக்கு மாகாணங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு வசிக்கும் ஷியா முஸ்லீம்களின் வழிபாடுகளுக்கு சன்னி முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஷியா முஸ்லீம்களுக்கு மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு உதவியதாக ஷியா பிரிவை சேர்ந்த சமூக ஆர்வலர் இஸ்ரா கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை ஆவணப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணைகள் இறுதி கட்டத்தைஎட்டிய நிலையில் இஸ்ராவிற்கு தூக்கு தண்டனை வழங்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மனித உரிமைகள் ஆணையம் கூறுகையில், சவுதியில் அரசு த்ரப்பு வழக்கறிகள் கலகக்காரர்களுக்கு உதவிய 5 சமூக ஆர்வலர்களுக்கு தூக்கு தண்டனை அழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்ராவும் ஒருவர். ஆனால், வன்முறையில் தொடர்பு இல்லாத சமூக ஆர்வலருகு மரண தண்டனை வழங்குவது என்பது கொடுமையானது என தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு முதல் பெண்களின் வளர்ச்சிக்கு அக்கறை செலுத்தி வரும் இளவசர் சல்மானுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் கிடைக்கப்பெற்றன. தற்போது பெண் சமூக ஆர்வலருக்கு மரண தண்டனை வழங்க எடுக்கப்பட்ட முடிவிற்கு மகளிர் அமைப்புகளும், மனித உரிமை ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

You may have missed