சனிக்கிழமை, கசையடி ரத்து; நேற்று- சிறார்களின் தூக்கு ரத்து: சபாஷ் போடவைக்கும் சவுதி..

Saudis cancel

ன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை சர்வ சாதாரணம்.
கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 187 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக நாடுகளில், மன்னரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

மன்னர் சல்மானும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் , சவுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பி அண்மைக்காலமாக சில கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறார்கள்.
பெண்களுக்கு காரோட்ட அனுமதி கொடுத்தது, அவர்கள் பொது வெளியில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதி தந்தது போன்ற சீர்திருத்தங்கள் இதில் அடங்கும்.
சவுதியில் கசையடி ரொம்ப பிரசித்தம்.
தப்பு செய்தால், பொது மக்கள் மத்தியில் பிரம்படி கொடுப்பது, ஒரு தண்டனையாக இருந்தது.
சனிக்கிழமை அன்று கசையடி கொடுக்கும் தண்டனையை ஒழித்து சவுதி அரசாங்கம் உத்தரவிட்டது.

இதனால், அந்த நாட்டு மக்கள் திக்கு முக்காடியுள்ள நிலையில்-
’’தவறு செய்யும் சிறுவர்களுக்கு மரண தண்டனை கிடையாது’’ என்று சவுதி அரேபிய அரசு நேற்று அதிரடியாய் அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் இதனை வரவேற்றுள்ளன.