saudi raghuramrajan

வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிகாலம் முடிவடைகின்றது.
அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் புதிய ஆளுநரைத் தேடும் வேலையில்  இந்திய அரசு  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
எனினும், ரகுராம் ராஜனை தங்களது நாட்டிற்கு  வளைத்துப்போட பல நாடுகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் சவுதி அரேபிய அரசு அவரை பணிக்கமர்த்த  கொடுத்துள்ள கவர்ச்சிகரமான சலுகைகள் தலையாயது.

அவருக்கு அதிகச் சம்பளம் மற்றும் சவுதி நாட்டின் எந்தமூலையில் அவர் விரும்பும் தங்குமிடம் என கவர்ச்சிகரமான வாய்ப்பினை வழங்கியுள்ளது.
அவரை பணிக்கமர்த்தி பல்வேறு துறைகளில் தங்களது பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியில் சவுதி அரேபிய அரசு இறங்கியுள்ளது என மங்களம்.காம் செய்திவெளியிட்டுள்ளது.

rbi1

இந்நிலையில் ‘பணி நீட்டிப்பை விரும்பவில்லை’ என ரகுராம் ராஜன் தமது அலுவலக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள   மின்னஞ்சலில் அறிவித்துள்ளார். அதனால், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

ரகுராம் ராஜன் போனால் போகட்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரிகள் அலட்சியமாய் கூறுகின்றனர்.

ரகுராம் ராஜன் 2008ம் அண்டின் உலகப் பொருளாதார மந்தநிலையை 2003ம் ஆண்டிலேயே கணித்துச் சொன்னவர் ஆவார்.ரகுராம் ராஜன் பதவியேற்ற பின்னர், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டது .சில மாதங்களிலேயே 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு இந்தியாவுக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகாமல் தடுக்கப்பட்டது. இதற்காகவே ஊடகங்கள் “ராஜன் எபெக்ட்” என புகழாரம் சூட்டின. 10% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆகக் குறைக்கப்பட்டது. சிறு வங்கிகளுக்கான உரிமங்களை அதிகப்படுத்தினார். வாரா கடன்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார் வங்கிகள் தங்களது நட்டங்களை பதிவு செய்தது வங்கிகள் தங்களது வாரா கடன்களை வசூலித்து நிதிநிலவரத்தை சரி செய்ய கெடு வைத்தார். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார். நாட்டின் சகிப்பின்மை குறித்து  வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தார். குறிபாக ஆட்டுக்கறி, மாட்டுக்கறி என்று ஆர்.எஸ்.எஸ் அமைபினர் வெறிகொண்டு படுகொலைகள் செய்தபோது உலக அளவில் இந்தியாவின் மதிப்பு பாதிக்கப்படும் என்றார்.

இதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எனவேதான்,  ரகுராம் ராஜன் போய்விட்டால் இந்தியாவின் எதிர்கால “மந்தம்” குறித்து பெரிதும் கவலை கொள்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
எனினும், உலக நாடுகளின் கடன் தகுதியை மதிப்பிட்டு, அவற்றுக்கான குறியீட்டை வழங்கி வரும், பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், ‘ரகுராம் ராஜன் விலகினாலும், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தனி நபரை விட, கொள்கைகளும், அவற்றின் செயலாக்கமும்தான் மிகவும் முக்கியம் ‘ எனத் தெரிவித்துள்ளது.

ராகுராம் ராஜன் பெயரளவுக்குதான் இந்தியர்; மனதளவில் அவர் ஓர் அமெரிக்கர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், ரகுராம் ராஜன் வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அரசியல்வாதி போன்று செயல்பட்டதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் உண்மையான அக்கறை செலுத்தவில்லை ராகுராம் ராஜன் என்று சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 

 ஊடகவியலாளர் மோகன் குருசாமி. ” ரகுராம் ராஜனுக்கு இருந்த சர்வதேச அந்தஸ்தும் நம்பகத்தன்மையும் முக்கியமானவை. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவர் திறமையாக செயல்பட்டார், வங்கிகளின் வராக்கடன்களை கடுமையாக ஒழுங்குபடுத்தினார், இது இந்திய பெருநிறுவனங்களின் பகையை அவருக்குத் தேடித்தந்தது,
அவர் இந்தியாவில் “சகிப்புத்தன்மை”யற்ற நிலை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலை வரும்போது, அதைப் பற்றி பயமின்றி கருத்துக்கூற ரகுராம் ராஜனுக்கு உரிமை உண்டு
என்றார்.

ரகுராம் ராஜனின் முடிவையொட்டி இந்தியப் பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.85 புள்ளிகள் குறைந்து 8,107.35 புள்ளிகளாக உள்ளது