ரியாத் :

குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு பொது இடத்தில் வலம் வந்ததால் சவுதி அரேபியில் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் ஒன்று நாடு சவுதி அரேபியா. இந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் உள்ளது உஷேகர் கிராமம். இங்குள்ள கோட்டை புராதன புகழ் மிக்கது. இங்கு இளம் பெண் ஒருவர் குட்டைப்பாவாடை அணிந்து தான் வலம் வரும்  காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த படம் சமூகவலைதளங்களில் வைரலானது.. இதை சவுதி அரேபிய டிவி ஒன்று டுவிட்டர் மூலம் செய்தியாகவும்  வெளியிட்டது.

இதனையடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகியது.

இந்த நிலையில் வீடியோவில் இருக்கும் பெண்மணியை சவூதி காவல்துறையினர் தேடிப்பிடித்தனர். இஸ்லாமிய சட்டவிதிகளை மீறி,  ஆடை அணிந்து கொண்டு பொது இடத்தில் வலம் வந்தார் எனக்கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சவுதி, ஆடைக்கட்டுப்பாட்டு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடான நாடாகும். குறிப்பிட்ட இளம்பெண்ணின் உருவத்தையும் மறைத்தே டி.வியில் செய்தி ஒளிபரப்பானது.