ரியாத்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டிசம்பர் 25ந்தேதி  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதமாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன. சவுதி அரேபியா பட்டத்து இளவரசராக இருப்பவர்  முகமது பின் சல்மான். அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது.
. உலக அளவில் கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியா தற்போது 35-வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில்  கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் அங்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 168 ஆக உள்ளது

இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. சவுதி அரேபியாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி,  பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

இதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ள சுகாதார அமைச்சர் தவ்பிக் அல் ரபியக், பொது மக்களுக்கு, தடுப்பூசியை வழங்குவதில் இளவரசர் முன்மாதிரி யாக திகழ்கிறார் என்றும், பாதுகாப்பான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை, குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

பைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னர், சவுதி வந்தடைந்தது. அங்கு, தடுப்பூசி போடுவதற்காக 5 லட்சம் பேர் பேர் பதிவு செய்துள்ளதாக சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதியில், 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,52,815 பேர் குணமடைந்தனர். 6,168 பேர் உயிரிழந்துள்ளனர்.