சென்னை:

வுதி பெட்ரோல் ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத் தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.46 அதிகரித்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணத விலை உயர்வை எட்டியது. பெட்ரோல் விலை ரூ.85ஐ தாண்டி உயர்ந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போதும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சவுதியில் உள்ள மிகப்பெரிய ஆலையான  அராம்கோ நிறுவனத்தின்  ஆலைமீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த  14-ம் தேதி முதல் பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் செப்டம்பர் 14-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாய் 78 காசுகளாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து செப்டம்பர் 17-ம் தேதி 74 ரூபாய் 99 காசுகளாக உயர்ந்தது. இன்று 76 ரூபாய் 24 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 46 காசுகள் அதிகரித்து உள்ளது.

அதேபோல் செப்டம்பர் 14-ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 09 காசுகளாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து செப்டம்பர் 17-ம் தேதி 69 ரூபாய் 31 காசுகளாக உயர்ந்தது. இன்று 70 ரூபாய் 33 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 1 ரூபாய் 24 காசுகள் அதிகரித்துள்ளது.