பாகிஸ்தானின் பொருதாளார நிலையை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டுடன் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

saudi

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி அடுக்கடுக்காக புகார் கூறி வந்தது. இது உலகளவில் சவுதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆசிய நாடுகளுக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி பாகிஸ்தானிற்கு சென்றுள்ள இளவரசர் முகமது பில் சல்மான் பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது.

அதன்படி பாகிஸ்தானிற்கு இளவரசர் சல்மான் சென்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையே எரிசக்தி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றுய்ம் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக 8 பில்லியன் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய இளவரசர் சல்மான், “ இந்த முதலீடுகள் ஆரம்பம் தான். இவை ஒவ்வொரு மாதமும், ஆண்டும் வளர்ந்து இருநாடுகளுக்கும் பலனளிக்கும் “ என கூறினார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இந்தியா வரும் இளவரசர் சல்மான் புதன் மற்றும் வியாழக்கிழமை சீனாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்ஹானை தலையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தாக்குதல் உலகளவில் கண்டனத்தை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானிற்கு சவுதி அரேபியா உதவ முன் வந்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.