யார் இந்த சவுதி இளவரசர் சல்மான் ?

இன்று உலகின் பேசுபொருளாகியிருக்கிறார் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சாத். உலக அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மையான நாடாக திகழும் வளமான நாட்டின் பணக்கார இளவரசர் சல்மான். இதனால் மட்டுமின்றி, இவர் செய்த சில சீர் திருத்தங்களாளும் உலக அளவில் பேசப்பட்டார்.

salman

பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள சவுதியில் அவர்கள் வாகனத்தை இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஓட்டுநர் உரிமம் வழங்கியது, திரையரங்குகளுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, பொருளாதார சீர்த்திருத்தங்கள் செய்தது போன்ற இளவரசர் சல்மானின் செயல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

எனினும் ஏமன் மீது போர் தொடுப்பது, அரசியல் ரீதியாக கத்தாருடனான மோதல் போக்கு உள்ளிட்ட சவுதியின் நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகளுடனான கூட்டுறவு கவுன்சிலில் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன.

ஆனால் முன் எப்போதையும்விட மிக அதிகமாக செய்திகளில் தற்போது அடிபட்டு வருகிறார் சல்மான்.

“அடிபடுகிறார்” என்கிற வார்த்தை பொருத்தமாகத்தான் இருக்கும்.

பத்திரிகையாளார் ஜமால் கஷோக்கி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சல்மானை நோக்கி உலகத்தின் கரங்கள் நீள்கின்றன.

சல்மானை விமர்சித்து வந்ததன் காரணமாக ஜமால் படுகொலை செய்யப்பட்டதாக சவுதி மீது துருக்கி குற்றம்சாட்டியிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா நாடுகளின் கண்டனத்தை சவுதி பெற்றுள்ளது.

யார் இந்த சவுதி இளவரசர் சல்மான் ?

சல்மான் பின் அப்துல் அஸிஸ் அவர்களின் மூன்றாவது மனைவி ஃபஹ்தாத் பின் சுதானிற்கு மூத்த மகன் முகமது பின் சல்மான். 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார்.

இவர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பின்னர் உள்ளூர் மாகாணங்களில் சில நாட்கள் வேலைபார்த்து வந்தார். 2009ம் ஆண்டு ரியாத் நகரின் ஆளுநராக பதவி வகித்த தனது தந்தைக்கு சிறப்பு ஆலோகராக சல்மான் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 2013ம் ஆண்டு முகமது பில் சல்மானிற்கு எல்லாமே ஏறுமுகம் தான். இளவசரின் நீதிமன்றத்தில் சல்மானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் சல்மானிற்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சல்மானின் தந்தை சவுதியில் மன்னராக பொறுப்பேற்றார். காரணம் சல்மானின் பாட்டனார் நாயேஃப் பின் அப்துல் அஸிஸ் இறந்தார்.

king-salman

அப்துல் அஸிஸ் இறந்த போது சல்மானின் தந்தைக்கு வயது 79ஆக இருந்தது. அப்போது அவருக்கு அரியணை வழங்கப்பட்டது. புதிய மன்னர் பதவி ஏற்றவுடன் எடுத்த இரண்டு முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, தனது மகன் பாதுகாப்பு துறையின் அமைச்சராகவும், மருமகனான முகமது பின் நாயேப் துணை இளவரசராகவும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அறிவித்தார். இதுமட்டுமின்றி, தனது முதல் பேரன் இன் சாத் அரச வம்சத்தின் நிர்வாகியாக நியமித்து மன்னர் அறிவித்தார்.

ஏமன் மீது தாக்குதல் ?

பாதுகாப்புத்துறை அமைச்சராக முகமது பின் சல்மான் பதவி ஏற்றதும் 2015ம் ஆண்டு ஏமன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். அரபு நாடுகளில் ராணுவ புரட்சி குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக தலைநகர் சானா வை கைப்பற்றியதுடன், அந்நாட்டின் ஜனாதிபதி அப்ரபு மன்சூர் ஹதியை நாட்டை விட்டு வெளியேறவும் சல்மான் வற்புறுத்தினார்.

yeman

ராணுவ புரட்சி கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட கிளர்ச்சியாளர்களை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இளவரசர் சல்மான் கட்டுப்படுத்தி வந்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி ஏமன் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அந்நாட்டில் ஆயிரகணக்கான மக்கள் பஞ்சத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஏமன் மீது வான்வழி தாக்குதல்களையே பெரும்பாலும் சவுதி மேற்கொண்டது.

எண்ணெய் ஏற்றுமதிக்கான திட்டம் ?

ஒருவருடம் கடந்த நிலையில் முகமது பின் சல்மான் பொருளாதாரத்தில் ஒருசில மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் எண்ணெய் ஏற்றுமதியில் புதிய திட்டத்தையும் கொண்டு வந்தார். எண்ணெய் ஏற்றுமதிக்கான திட்டம் ”விஷன் 2030 “ என்றழைக்கப்பட்டது. அதாவது, 2015ம் ஆண்டு 163.5 பில்லியனும், 2020க்குள் 600 பில்லியனும், 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் ரியால் அளவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க சல்மான் திட்டம் வகுத்தார்.

oil-exports

பெண்கள் உரிமைகளுக்கான நடவடிக்கை ?

இதுமட்டுமின்றி கல்விலும், பெண்களுக்கான உரிமைகளிலும் சில மாறுதல்களை கொண்டுவர இளவரசர் சல்மான் முயன்றார். வேலை செய்வதில் பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும், அனைத்து துறை சார்ந்த வேலைகளிலும் பெண்களும் பங்கு கொள்ள வேண்டும் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை சல்மான் எடுத்தார்.

SaudiWomen

அதன்பின்னர் நீண்ட வருடமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருசில கட்டுப்பாடுகளை இளவரசர் சல்மான் நீக்கினார். அதில் ஒன்றுதான் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழமைவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கத்தார் புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம் ?

இவைதவிர சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பெக்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஆதரவாக கத்தார் இருந்ததாகவும், இதன் காரணமாக அந்நாட்டை புறக்கணிப்பதாகவும் சவுதி இளவரசர் சல்மான் அறிவித்தார்.

economic

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை ?

அக்டோபர் மாதம் மாற்றியமைக்கப்பட்ட இஸ்லாம் என்ற பெயரில் 500 பில்லியன் செலவில் நகரங்களில் புதிய வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு அடுத்த மாதம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக சல்மான் அரசருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அரசர் அல்வாலீத் பின் தலால் மற்றும் மிதப் பின் அப்துல்லா, தலைமை பாதுகாப்புத்துறை அதிகாரி உட்பட 381 பேர் கைது செய்யப்பட்டனர். ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் தங்களது சொத்து, பணம், மற்றும் உடைமைகளில் இருந்து அவற்றை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் ஊழல் தொகை ரூ.400 பில்லியன் அரசிற்கு திரும்ப அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் மட்டும் காவலில் வைக்கப்பட்டனர்.

anti

சவுதியின் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடாமல், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து திரும்ப தொகை பெறப்பட்டது. இந்த செயல் சல்மானிற்கு வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும், ஊழல் அந்த நாட்டின் புற்றுநோய் என கூறிய சல்மான் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சவுதி இளவரசரின் கொள்கைகளால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும், சிவில் சமூகம் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றால் சல்மான் அனைவராலும் பேசப்பட்டார்.

பத்திரிகையாளரை கொன்றதாக குற்றச்சாட்டு :

தற்போது துருக்கி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவம் சவுதி மீது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தொடர்ந்து இளவரசர் சல்மானை விமர்சித்து எழுதி வந்த ஜமால் இம்மாத முதலில் காணாமல் போனார். அவரை சவுதி தான் கொலை செய்தது என்று கூறி வந்த துருக்கி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டது.

jamal

ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்ட நிலையில் இதற்கும், இளவரசருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. எனினும் இளவரசர் சல்மானின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் ஜமாலை கொன்றதாக கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் நெருக்கடியை தற்போது சவுதி சந்தித்து வருகிறது.