ரியாத்

வுதி அரேபியாவில் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவில் இளவசர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் ஊழல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விடுதிகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் உள்ள ஊழல் ஒழிப்புத் துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள இளவரசர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால் சவுதியின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு தெரிவித்ததாக ஒரு தகவல் வந்துள்ளது.  ஆனால் இது குறித்து சவுதி அரேபிய அரசு எந்த ஒரு கருத்தும் கூறவில்லை.   ஆனால் வங்கி அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் இது போல நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

ஊழலில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை பற்றிய விவரங்களுக்காக சவுதி அரசு ஆடிட்டர்கள், துப்பறிவாளர்கள், போன்றோரின் உதவியை கேட்டுள்ளது   கைது செய்யப்பட்ட 208 பேர் ஊழலின் மூலம் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.