மும்பை:

ந்த இந்தியாவில் ஹஜ் பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேருக்கு சவூதி அரசாங்கம்  அனுமதி  அளித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் அதிகம்.

முகமது நபியின் பிறப்பிடமாக கருதப்படும் புனித மெக்கா  நகரம், மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வில் ஒருமுறையாவது புனித பயணம் மேற்கொள்வதை கடமையாக கருதுகின்றனர்.  இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வந்த மானிய தொகையை  மோடி அரசாங்கம் இந்த ஆண்டு  ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து  1.75 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைக்கு சவூதி வர அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்து உள்ளது.

பொதுவாக, 10லட்சம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் அனுமதி அளித்து வருகிறது.. இந்நிலையில் கடந்த ஆண்டு (2017)  இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 பேருக்கு அனுமதி அளித்த நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்துக்கு75 ஆயிரம் பேருக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆண்டு கூடுதலாக 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.