800 அல்கொய்தா போராளிகளை கொன்றதாக சவுதி தலைமையிலான கூட்டணி கூறுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை அன்று, ஏமன் பகுதியில் சவுதி தலைமையிலான கூட்டணி, ஒரே தாக்குதலில் 800 க்கும் மேற்பட்ட அல்கொய்தா தீவிரவாதிகளைக் கொன்றதாக அறிவித்தது.
saudi 2
ஏமன் இராணுத்தைச் சேர்ந்த போராளிகள், அத்துடன் சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறப்புப் படையினர், தென்கிழக்கு துறைமுக நகரமான முக்கால்லாவில் உள்ள குழுவின் முக்கிய இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடங்கினர். கொல்லப்படாத போராளிகள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்களில் பலர் அல் கொய்தா தலைவர்கள் ஆவர். ஏமனிலிருந்த போராளிகளின் கூட்டத்தை அகற்றி நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை  மீண்டும் பதவியேற்றுக் கொள்ள அனுமதிக்கவும் கூட்டணி எண்ணுகிறது.
மேலும் அதன் அறிக்கையில், இஸ்லாமிய போராளிகளை அழிக்கும் நகரங்களில் “தீவிரமான மனிதாபிமான நிவாரண முயற்சிகளை அனுமதிக்க” எண்ணுவதாக கூட்டணி கூறியது.  தாக்குதலின் ஒரு பாகமாக, ஒரு எண்ணெய் முனையத்தை கைப்பற்றியதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
கூட்டணியின் அறிக்கையிலுள்ள உண்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் பொதுமக்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்பதும் தெரியவில்லை.
ஏப்ரல் 11 முதல், ஏமனில் சவுதி ஆதரவுடைய அரசாங்க படைகள் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உடன்பாடு, தங்கள் சொந்த பிராந்திய நலன்களுக்காக 13 மாத சண்டையை பயன்படுத்தி கொண்டுள்ள ஜிஹாத் குழுக்களை உள்ளடக்கவில்லை.
saudi 1