saudi king

நாமெல்லாம் விமானத்தில் செய்ய 15 கிலோ மற்றும் ஏழு கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல முடியும், அதற்குமேல் பயணமூட்டை/சரக்கு எடுத்துச் செல்ல ஒரு கிலோவிற்ரு நூறு ரூபாயெனத் தீட்டி விடுவார்கள். ஆனால் சவுதியரேபிய மன்னருக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. அவர் 459 மெட்ரிக் டன் (ஒரு டன் என்பது 1000 கிலோ) எடையுள்ள பயணமூட்டையை எடுத்துச் செல்ல விருக்கின்றார்.

சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் இந்தோனேஷியாவிற்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் தனது ஒன்பது நாட்களுக்குக் கூட சிறு சௌகரியத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் உள்ள தகவல்படி, சவூதி மன்னர் தனது பயணத்தின்போது அவருடன் 459 மெட்ரிக் டன் (506 அமெரிக்க டன்) கொண்ட சரக்குகளை எடுத்துசெல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது – அதில் இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் S600 லிமோசைன்ஸ் மற்றும் இரண்டு மின் லிஃப்ட்-ம் அடங்கும்.
ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கையில், சவூதிமன்னர் உடன் பயணிப்போரின் எண்ணிக்கை 1,500 பேர் கொண்ட குழுவில் 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள் மற்றும் குறைந்தது 100 பாதுகாப்புப் படைவீரர்கள் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பீட்டளவில், இந்த எடை அதிகப்படியானது இல்லை.

சவூதி அரேபிய மன்னர் மகத்தான லக்கேஜ் மிகப் பெரியதாகத் தோன்றுகிறதா ?
அப்படியெனில், நீங்கள் ஒபாமா வின் ஆப்பிரிக்க பயணத்தின் எடை என்ன என்பதை அறிந்தால் அசந்து போவீர்கள். மற்ற உலகத்தலைவர்களின் சராசரி எடைதான் என்பதை உணர்வீர்கள். கடந்த 2013ம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள செனிகல், தென் ஆப்பிரிக்கா மற்றும் தான்சானியாவிற்கு சென்ற போது, அவருடன்56 ஆதரவு வாகனங்கள், 14 (லிமொசைன்ஸ்)சொகுசு கார்கள், மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய நூற்றுக்கணக்கான U.S. இரகசிய சேவை முகவர் உட்பட, சேர்ந்து.

சவுதி அரசர் 46 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தோனேசியா செல்ல உள்ளார். அதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருவதைப் பார்த்தால், அவரது பயணமே ஒரு அதிசயம் தான்.