மெக்கா

தவி நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்துக் கொள்வதாக சவுதி மன்னர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் நேற்று இஸ்லாமிய நாடுகள் கூட்டுறவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு வந்த அனைத்து பிரதிநிதிகளையும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வரவேற்றார். இந்த மாநாட்டுக்கு பாகிஸ்தான் நாட்டின் சார்பில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் வந்திருந்தார்.

இம்ரான் கான் திடீரென சவுதி நாட்டு மன்னர் சல்மான் பின் இடம் சென்று பேசத் தொடங்கினார். மன்னரிடம் பேசுவதற்கு ஒரு சில நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மதிக்காமல் இம்ரான் கான் நேரடியாக சென்று பேசி உள்ளார். அத்துடன் மன்னரிடம் தனது கருத்துக்களை தெரிவித்தோர் அதற்கு மன்னர் அளிக்கும் பதிலை கேட்டுவிட்டு செல்ல வேண்டும்.

ஆனால் இம்ரான் கான் மன்னர் பதில் அளிக்கும் வரை காத்திருக்காமல் தனது மொழி பெயர்பாளர் மன்னருக்கு இதை விளக்குவார் என கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.  இது சவுதி மன்னருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது    சவுதி மன்னர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் இவ்வாறு நெறிமுறைகளை மதிக்காமல் நடந்துக் கொண்டுள்ளது சவுதி அரசுக்கு மிகவும் வெறுக்கத் தக்கதாக உள்ளதாக மன்னர் கூறி உள்ளார். அதை ஒட்டி இன்று மன்னரும் அவர் அமைச்சர்களும் இம்ரான் கான் உடன் நடத்த இருந்த சந்திப்பு ரத்து ஆகி உள்ளது.