மகனுக்கு முடிசூட சவுதி மன்னர் சல்மான் முடிவு

ரியாத்:

சவுதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார். அவரது மகன் முகமதுபின் சல்மான் முடிசூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபிய மன்னராக சால்மான் (வயத 81) உள்ளார். 2012-ம் ஆண்டு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டு 2015-ம் ஆண்டு மன்னராக முடிசூடினார்.

இந்நிலையில் அடுத்த வாரம் பதவி விலக அதாவது முடிதுறக்க உள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவரது மகன் முகமதுபின் சல்மான் (வயது 32) முடிசூட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.