இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்திய சவுதி இளவரசர்

டில்லி

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சவுதி இளவரசர் இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்தி உள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லும் ஹஜ் பயணம் மிகவும் முக்கியமான கடமையாக கருதப்படுகிறது.     இவ்வாறு செல்வதற்கு அரசு வழங்கிய உதவித் தொகையை உச்சநீதிமன்றம் கடந்த 2012 ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.   அதன் பிறகு ஆண் துணை இல்லாமல் ஹஜ் செல்லும் பெண்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.    சென்ற வருட்ம் 1300 பெண்கள் இது போல் தனியாக ஜஹ் பயணம் செய்துள்ளனர்.

ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை மெக்கா அமைந்துள்ள சவுதி அரேபிய அரசு தீர்மானிக்கிறது.   அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு 1,36,000  பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.   அதன் பிரகு இருமுறை உயர்த்தப்பட்டு கடந்த வருடம் 1,75,025 பேருக்கு சவுதி அரசு அனுமதி வழங்கியது.

தற்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்திய சுற்றுப்பயணம் வந்த பொது பிரதமர் மோடி ஹஜ் பயணிகள் எண்ணிக்கைய அதிகரிக்க அனுமதி கோரினார்.   அதை ஒட்டி சவுதி இளவரசர் மேலும் 25,000 பேருக்கு அனுமதி அளித்துள்ளார்.    தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி கிடைத்துள்ளது.

இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “மூன்றாம் முறையாக ஹஜ் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2014 ஆம் ஆண்டு 1,36,000 பேருக்கு அனுமதி அளித்த நிலையில் தர்போது 2 லட்சம் பேருக்கு அனுமதி கிடைத்துளது.  இதற்கான நான் பிரதமர் மோடி, சவுதி அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ், மற்றும்  பட்டத்து இளவரசருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறி உள்ளார்.