வாஷிங்டன்

மெரிக்கப் பயணம் வந்துள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.    அவர் இந்தப் பயணத்தின் போது பல அமெரிக்க நகரங்களுக்கு செல்ல உள்ளதாகவும் அதிபரை சந்திக்க உள்ளதாகவும் சௌதி அரசு தெரிவித்துள்ளது.   இந்தப் பயணத்தின் நோக்கம் தனது அரசின் பொருளாதர மற்றும் சமூக கொள்கைகள் மாற்றங்களுக்கு அமெரிக்க ஆதரவை பெறுவதும், மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களை சௌதியில் முதலீடு செய்ய அழைப்பதுமே என இளவரசர் தெரிவித்துள்ளார்.

முகமது பின் சல்மான் செய்தி தொலைக்காட்சியான சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு 60 நிமிடம் என்னும் பெயரில் பேட்டி அளித்துள்ளார்.   இந்த பேட்டியில் அவர், “சௌதி அரேபிய இஸ்லாமிய பழங்காலக் கொள்கைப் படி நடந்துக் கொண்டிருந்த நாடு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.   பல இஸ்லாம் அல்லாத நாடுகளில் இருந்து எங்கள் நடு வேறுபட்டிருந்தது.  பெண்கள் உரிமை மறுப்பு, சமூக வாழ்க்கையில் கடும் கட்டுப்பாடுகள்,  திரையரங்குகள், இசைக்கு எதிர்ப்பு என பல கட்டுப்படுகள் முன்பு இருந்தன.  இப்போது நாங்கள் நிகழ்காலத்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொண்டுள்ளோம்.

ஆணுக்கு பெண் சமமா என நீங்கள் கேட்டால் நான் நிச்சயமாக இருவரும் சமமே என சொல்வேன்.  அனைவௌம் மனிதர்களே, வித்தியாசம் ஏதும் இல்லை.   எங்கள் அரசு பெண்களுக்கு உடை விஷயத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தவும்,  பெண்களின் ஊதியத்தை ஆண்களுக்கு சமமாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இளவரச்ரகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்களை சிறை பிடித்தது நாட்டின் முன்னேற்றத்துக்காகவே ஆகும்.    ஊழலை ஒழிக்க சௌதி அரேபியாவில் இந்த நடவடிக்கை தேவை என்பதால் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.  அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.   இதில் மரணம் அடைந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை.   யாரையும் அடித்து துன்புறுத்தவில்லை.

நான் சேர்த்துள்ள சொத்துக்கள் யாவும் சட்டத்துக்கு உட்பட்டவைகளே ஆகும்.  எனது வர்த்தகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நான் எனது சொந்த செலவுகளை கவனித்துக் கொள்கிறேன்.    எனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நான் அரசாட்சியை ஏற்றுக் கொள்வேன்.