ரியாத்:

சவுதியில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி இளவரசர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். ஏமன் நாட்டு எல்லை அருகில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் சவுதி இளவரசர் மன்சூர் பின் உயிரிழந்தார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஊழல் தடுப்பு கமிட்டி நேற்று உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்களை கைது செய்யப்பட்டனர். 100 அமைச்சர்கள் மற்றும் இளவரசர்கள் ரியாத்தில் உள்ள ரீட்ஸ் கார்ல்டன் ஓட்டல் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவத்தை தொடர்ந்தே ஹெலிகாப்டரில் அதிகாரிகளுடன் பயணம் செய்த இளவர மாக்ரோன் இறந்துள்ளார். முதலில் இந்த சம்பவம் விபத்து என்று கருதப்பட்டது. ஆனால், இது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என்று தற்போது இஸ்ரேல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி இளவரசர் கொல்லப்பட்டார் என்ற தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள்ள என்ன? என்பதை அ ந்த நாளிதழ் வெளியிடவில்லை.

முன்னதாக மாக்ரோன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளவரசர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் முகமது பின் சல்மானின் அரியனை ஏற ஆதரிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதை மிடில் ஈஸ்ட் மானிட்டர் அமைப்பு நியூ கலீஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் மூலம் பின் சல்மான், தன க்கு எதிரான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் அடக்க என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற எ ச்சரிக்கை செய்தி சவுதி ராஜ குடும்பத்திற்கு விடுக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து மறைந்த மன்னர் ஃபாகித் இளைய மகனான இளவரசர் அப்துல் அஜிஸ் பின் பாகித் சுட்டு கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியானது. பலதரப்பட்ட தகவல்கள் இந்த கொலை சம்பவத்தை உறுதி செய்தது. ஆனால், சவூதி தகவல் துறை அமைச்சர் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இதில் அந்த இளவரசர் உயிரோடு இருக்கிறாரா?, காயம் அடைந்தாரா?., கொல்லப்பட்டாரா? என்பதை உறுதிப டுத்தவில்லை.

இதை தொடர்ந்து மற்றொரு இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபாகித் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது. சவுதியை ஆளும் குடும்பத்தை சேர்ந்த லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ சமீபத்தில் ரியாத் வந்தார். லெபனால் விவகாரத்தில் ஈரான் தலையீடு அதிகரித்திருப்பதால் பதவியை ராஜினமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். தான் அங்கே தங்கியிருந்தால் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு தன்னை கொன்றுவிடும் என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.