ரியாத்:
டுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம் 6,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது சவுதி கொரொனா பரவல் குறைந்துள்ளது.

சவுதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்ட செளதி அரேபிய நாட்டவர் மற்றும் குடியேறியவர்களுக்கு கொடுக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை பெறுபவரின் முந்தைய உடல்நிலை பாதிப்புகளையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்ட யாத்ரீகர்களுக்கு மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கபடுவார்கள் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட யாத்திரீகள் மட்டுமே மெக்கா புனித பயணத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.