நெட்டிசன் பகுதி:  “குவைத் தமிழ் பசங்க” பக்கத்தின் பதிவு
சவுதி அரேபியாவில் வேலையின்றி தவித்து வரும் இந்தியர்கள் செப்டம்பர் 25-க்குள் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால், அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள், வேலையையும், ஊதியத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
 
0
உணவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான இந்தியர்கள், சம்பளத்தை பெறாமல் நாடு திரும்ப மறுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சவுதிஅரேபியாவில் வேலையிழந்த இந்தியர்கள் செப்டம்பர் 25-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு திரும்பும் இந்தியர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட தேதிக்குள் நாடு திரும்ப தவறினால், உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளையும், நாடு திரும்புவதற்கான கட்டணத்தையும் பாதிக்கப்பட்டவர்களே செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மூடப்பட்ட நிறுவனங்களுடனான சவுதி அரசின் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அனைவரது சம்பள நிலுவை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.