ரியாத்: வளைகுடா பகுதியில் போரைத் தவிர்க்கவே விரும்பவுதாகவும், அதேசமயம், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் சவூதி அரேபிய அரசு, ஈரானை எச்சரித்துள்ளது.

மேலும், தற்போது முடிவு ஈரானின் கைகளில்தான் உள்ளது என்றும் அது கூறியுள்ளது.

கடந்த வாரம், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானால் ஆதரிக்கப்படும் ஹொதி குழுவினால், சவூதியின் இரண்டு எண்ணெய் மையங்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலை நடத்த உத்தரவிட்டதே ஈரான்தான் என்று சவூதி அரசு குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில்தான், இப்பிராந்தியத்தில் போரை தவிர்க்கவே சவூதி அரசாங்கம் விரும்புகிறது என்றும், அதேசமயம், தனது பாதுகாப்பு என்று வந்துவிட்டால், என்ன விலை கொடுத்தேனும் தற்காத்துக்கொள்ள தயார் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், வளைகுடா மற்றும் அரபு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை, வரும் மே 30ம் தேதியன்று ‍மெக்காவில் கூட்டியுள்ளது சவூதி அரசு.