ரியாத்

வுதி அரேபியாவில் பெண்களும் இனி கார் ஓட்டலாம் என சவுதி மன்னர் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது.  இப்போதைய வழக்கப்படி ஆண்கள் மட்டுமே வாகனத்தை செலுத்த முடியும்.  சவுதியினுள் பெண்கள் காரை ஓட்டினால்,  கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.   இதனால் பல குடும்பங்களில் பெண்கள் வெளியே செல்வதற்காக ஓட்டுனர்களை பணியில் அமர்த்தி உள்ளார்கள்.   பல சமூக ஆர்வலர்களும் இந்த தடையை நீக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் நேற்று பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இன்னும் 30 நாட்களுக்குள் இது பற்றிய அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் வரும் 2018ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இருந்து இந்த சட்டம் அமுலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உலகெங்கும் உள்ள பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   சவுதியில் வெகு நாட்களுக்குப் பிறகு ஆண்களும் பெண்களும் சமமாக நடத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளது.   பல இடங்களுக்கும் பெண்கள் நுழையவே தடை விதிக்கப்பட்ட சவுதியில் பெண்களுக்காக சட்டங்கள் மெல்ல மெல்ல தளர்த்தப் படுவதை பெண்ணிய போராளிகள் பாராட்டி உள்ளனர்.