ஃபார்முலா ஒன் காரை ஓட்டி சவூதி அரேபியாவை சேர்ந்த பெண் சாதனை

சவூதி அரேபியாவை சேர்ந்த அசீல் அல் ஹமத் என்ற பெண் ஃபார்முலா ஒன் என்ற அதிவேக ரேஸ் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார். நீண்ட நாட்களாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவூதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மன்னர் சல்மான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீக்கி உத்தரவிட்டார். அதன்பிறகு சவூதியில் கார் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் ரேஸ் கார்களை ஓட்டுவதில் மிகவும் பிரியம் கொண்ட அசீல் அல் அஹமத் ஃபார்முலா ஒன் காரை ஓட்டியப்படி பிரான்சில் உள்ள கடினமான லே காஸ்டெல்லைட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
aseel
வளைகுடா பகுதியை ஒட்டி செல்லும் லே காஸ்டெல்லைட் பாதைகள் மிகவும் ஆபத்தானவையாக காணப்படும். பெண்கள் காரில் பயணம் செய்வதற்கு அச்சப்படும் அந்த பாதையில் பார்முலா ஒன் காரில் அசீல் சென்று சாதனை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு ரெனால்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கார் ஓட்டப்பந்தயத்தில் அசீல் பங்கேற்றார்.

இது குறித்து அசீல் கூறுகையில்,” பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டதை கொண்டாட வேண்டும், மோட்டார் வாகன ரேஸ் குறித்து பெண்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். இதன் மூலம் அடுத்த தலைமுறையை சேர்ந்த பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கு முறையாக பயிற்சி அளிப்பதன் மூலம் விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும், இது அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக அமையும், கார் ஓட்டப்பந்தயத்தில் மிகப்பெரிய சாதனையை படைப்பது எனது அடுத்த இலக்காகும்” என்று கூறினார்.
nullaseel al
மேலும் ”கார் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பார்முலா ஒன் காரை ஓட்ட வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவாக இருந்தது. இப்போது அது நடந்துள்ளது. தற்போது சவுதி அரேபியாவில் உள்ள சாலைகளில் சாதாரண பெண்களும் வாகனத்தை ஓட்டி செல்கின்றது. பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் அனைவரும் சாதிக்கலாம்” என்று அசீல் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் முதல் பெண் உறுப்பினராகவும், சர்வதேச ஆட்டோமொபை அமைப்பின் உறுப்பினராகவும் அசீல் அல் ஹமத் உள்ளார். பழமை வாய்ந்த முஸ்லீம் ராஜ்ஜியத்தில் பெண்களின் அடக்கு முறைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை உலகமயமாதலின் காரணமாக மன்னர் சல்மான் கான் நீக்கி உத்தரவிட்டார்.