சவுதி: முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்களுக்கு அனுமதி

ரியாத்:

சவுதியில் முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பெண்கள் விளையாட்டு மைதானங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.

இதையடுதுது நேற்று ஜெட்டாவில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை காண பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினருடன் சேர்ந்து அமரும் பிரிவில் தான் அவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சவுதியில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விலக்கு அளிக்கப்பட்டு வருவதற்கு உலக நாடுகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Saudi women after entering football stadium for first time, சவுதி: முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்களுக்கு அனுமதி
-=-