ரியாத்:

சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.

இந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அறிவித்தார். அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுக்க பெண்களுக்கு அனுமதி, கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது அந்நாட்டு ராணுவத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. ரியாத், மக்கா, அல்-குசைம், அல் மதினா மாகாண பெண்கள் ராணுவத்தில் வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.