சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

வுதி அரேபியா

லகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து உலகின் அதிக சந்தை மதிப்பு மிக்க நிறுவனமாக ஆப்பிளும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இருந்து வந்தன.  பங்குச் சந்தை வர்த்தகம் வாயிலாக ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான முதலீட்டைத் திரட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமை ஆப்பிளுக்கு உண்டு.   தற்போது இந்த நிலை மாறி உள்ளது.

சவுதி அரேபிய அரசு நிறுவனமான அராம்கோ 2 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உயர்ந்து உலகின் மிக பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.  இந்த நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.  வரலாற்றில்  முதன் முறையாகப் பங்கு வர்த்தகம் மூலம் பெரும் நிதியை திரட்டியதின் மூலமாக அராம்கோ இந்த முதலிடத்தை அடைந்துள்ளது.

ஆப்பிளின் வர்த்தக முதலீடு ஒரு லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் பங்குச் சந்தை வரவு மூலம் அராம்கோவின் வர்த்தக மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்துவிட்டது.  சவுதி அரேபியா நிறுவனமான அராம்கோவின் இந்த சந்தை மதிப்பு மூன்றாம் உலக நாடுகளின் மொத்த ஜிடிபி மதிப்புக்கு நிகரானது.

அத்துடன் அமேசான், முகநூல்,  வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பை இணைத்தாலும் அது அராம்கோவின் மதிப்பு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் ஜிடிபி மதிப்பை விட அதிகமாக ஒரு நிறுவனம் சந்தை மதிப்பு கொண்டிருப்பது உலக வர்த்தக சந்தையையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.