Random image

சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மற்றுமொரு வீரர் அர்ஜூன்சிங் சீமா வெண்கலம் வென்றுள்ளார்.

saurabh

ஐ.எஸ்.எஸ்.எஃப். நடத்தும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவில் உல்ள சங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 18 ஆடவர் மற்றும் 11 மகளிர் அடங்கிய தனி நபர் போட்டியும், அணி போட்டிகளும், ஜூனியர் பிரிவில் 15 ஆடவர் மற்றும் 9 பெண்கள் பங்கேற்கும் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி தங்கம் வென்றுள்ளார். 16வயதே நிரம்பிய சவுரப் இப்போட்டியில் 245.5 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து, தனது சாதனையை தானே முறியடித்து உள்ளார். இவரை தொடர்ந்து கொரியாவின் ஒஜின் லிம் வெள்ளியும், இந்தியாவின் மற்றுமொரு வீரர் அர்ஜூன் சிங் சீமா வெண்கலமும் வென்றனர்.

கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.