ராஜ்கோட்:

ஞ்சி டிராபின் இறுதி போட்டி இன்று பெங்கால் சவுராஷ்டிரா அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.

ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கொரோன வைரஸ் பீதி காரணமாக, மூடிய கதவுகளுக்குப் பின்னால் இந்த விளையாட்டு விளையாடியது, இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் மோதின. கடந்த 9-ந்தேதி அன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து அடித்து விளாசியது இதில் 425 ரன்களை குவித்தது..

பின்னர் பெங்கால் அணி களமிறங்கியது. நேற்றைய ஆட்ட முடிவில்  பெங்கால் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள்  மட்டுமே அடித்திருந்தது. 4வது நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு  354 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  இன்று நடைபெற்ற 5வது நாள் ஆட்டத்தில் 381 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது…

இந்த நிலையில் 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 105 ரன்கள் எடுத்திருந்த 4 விக்கெட்டுக்களை பறி கொடுத்தது. அத்துடன் ஆட்டம் நேரம் முடிந்த நிலையில், பாய்ண்டுகளின் அடிப்படையிலும்,, சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சவுராஷ்டிரா அணி முதன்முறையாக ரஞ்சி டிராபி கோப்பையை தட்டிச்சென்றது.