மும்பை

இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இனி விளையாடுவாரா என்பதில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி.  இவர் இந்திய அணியின் தலைவராக இருந்துள்ளார்.  தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் தலைவர் பொறுப்பில் உள்ளார்.   சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு தோனி எந்த  போட்டியிலும் பங்கு பெறவில்லை.   இவர் ஓய்வு பெற உள்ளதாக பலரும் கூறி வந்தனர்.

இதுவரை தோனி த்னது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.    அணி வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் குட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்தது.   அப்போது தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்துத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் வரும் 23 ஆம் தேதி சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பதவி ஏற்க உள்ளதால் இந்தக் கூட்டம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி, “இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினரை நான் வரும் 24 ஆம் தேதி சந்திக்கப் போகிறேன்.  தோனியைக் குறித்த அவர்களின் முடிவை நான் அப்போது தெரிந்துக் கொள்வேன்.  நான் அதன் பிறகு தோனியின் விருப்பத்தை அறிந்த பின்னர் அவர் எதிர்காலம் குறித்து அறிவிக்கிறேன்,”எனத் தெரிவித்துள்ளார்.