அமெரிக்காவில் ராணுவ விமானம் சாலையில் விழுந்து விபத்து: 9 பேர் பலி

வாஷிங்டன்:

மெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் சவன்னா என்ற பகுதியில், உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ஹில்டன் கில்ஸ் விமான நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

WC-130 என ராணுவ விமானத்தில், ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் ஏற்றிவந்தபோது, விமான நிலையம் அருகே இறங்க வேண்டிய தருணத்தில் எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக விமானம் உடனடியாக தீபிடித்து எரிந்தது. இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் தீயில் கருவி உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளுர் காவல்துறையினரும், ராணுவத்தினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.