புதுடெல்லி:

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை நிறுத்த, சந்திரசேகர் ஆசாத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் சாவர்கர் பணம் கொடுக்க முன் வந்த தகவல் வெளியாகியுள்ளது.

சந்திர சேகர் ஆசாத்.

‘ஜனதா கா ரிப்போர்ட்டர்’ இணையத்தில் அம்ரேஷ் மிஸ்ரா எழுதிய கட்டுரையின் விவரம் வருமாறு:

முன்னோடி புரட்சிகர இயக்கமாகவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அமைப்பாகவும் விளங்கிய இந்துஸ்தான் சோஸலிஸ குடியரசு ராணுவத்தின் (ஹெச்எஸ்ஆர்ஏ) தலைவராக ராம் பிரசாத் பிஸ்மில் இருந்தார்.

அவருக்குப் பின் சந்திர சேகர் ஆசாத் தலைவரானார். அதன்பின்னர் அஸ்ஃப்ராக் உல்லா, ரோஷன் சிங், ராஜேந்திர லஹிரி ஆகியோர் இந்த இயக்கத்தை வழி நடத்தினர்.

இவர்கள் 4 பேருமே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலக் கட்டத்தில் தூக்கிலிடப்பட்டனர். அதன்பின்னர் இந்துஸ்தான் சோஸலிஸ்ட் குடியரசு ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டது.

இவர்களுடன் பணியாற்றிய பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு, ஆஜாத் ஆகியோர் இந்த ராணுவத்தை மீண்டும் கட்டமைத்து சோஷலிச அமைப்பு என பெயரிட்டனர். இந்த அமைப்பையும் ஆங்கிலயேர்கள் அழித்தனர் என்பது வரலாறு.

இவர்கள் அழிக்கப்படுவதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒரு விசயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆசாத் இடதுசாரி கொள்கையுடையவராக இருந்தாலும்,பூணூல் அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்திருந்தாலும், உத்திரப்பிரேதச மாநிலம் பதார்கா பிராமணர் வம்சத்தவராக இருந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிந்தா திவாரி, மங்கல் பாண்டே போன்ற ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் போல் இவரும் பிராமணர் சமூகத்திலிருந்து வந்தவர்.

இடது சாரி கொள்கையோடு இருந்தாலும் கடவுள் வழிபாட்டை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். அப்படியிருந்தும் சமத்துவத்தை பெரிதும் நம்பியவர். சந்திரசேகர் ஆசாத் நெற்றியில் ஒருபோதும் திலகமிட்டதில்லை.

ஆனால், பின்னர் அவர் நெற்றியில் திலகமிட்ட போலி படங்களை வெளியிட்டு, அவரை இந்துத்வாவின் சின்னமாக காட்டும் முயற்சி நடந்தது.

பூணுல் தரித்திருந்தாலும் ஆசாத் மல்யுத்த வீரராக இருந்தார். ஆவணங்களாக இருக்கும் அவரது படங்களில் எதிலுமே நெற்றியில் திலகமிடப்படவில்லை.

1980-ம் ஆண்டுக்கு முன்பு, பகத்சிங்கை சீக்கியர்களின் கதாநாயகனாக காட்ட காலிஸ்தான் இயக்கம் முற்பட்டது.

ஆனால், சுதந்திரப் பேராட்டத்துக்கு முன்பே அவர் கொல்லப்படும் முன், தான் நாத்திகவாதி என்று சுயசரிதையில் எழுதி வைத்தார். அதனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

அதேபோல், ஆசாத்தையும் இந்து மதத்தின் பிரதிநிதியைப் போல் சித்தரிக்கும் முயற்சியும் தோல்வியடைந்தது.

ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசாபை மீது அவர் வெறுப்புணர்வை காட்டியதற்கான ஆவணங்கள் இருந்தன. இதுவே அவரை இந்து ஆதரவாளராக சித்தரிக்கும் முயற்சிக்கு தடையாக இருந்தது.

ஆர்எஸ்எஸ் நிறுவனரும், இந்துஸ்தான் சோஸலிஸ குடியரசு ராணுவத்தின் முன்னாள் உறுப்பினருமான ஹேட்சேவார், ஆங்கிலேயரின் உளவாளி என்பதை ஆசாத் வெளிப்படையாகவே கூறிவந்தார்.

ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் , இந்துஸ்தான் சோஸலிஸ குடியரசு ராணுவ உறுப்பினர்களை பிரிட்டிஷாருக்கு காட்டிக் கொடுத்தது ஹெட்ஜேவார் என பகத்சிங்கும், ஆசாத்தும் சந்தேகப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை ஆங்கிலேயர்களின் கைக் கூலிகள் என இந்துஸ்தான் சோஸலிஸ குடியரசு ராணுவத்தினர் அழைக்க ஆரம்பித்தனர். பகத்சிங் கைது செய்யப்பட்டதும், அவரை மீட்பதற்காக நிதி திரட்டினார் சந்திர சேகர் ஆசாத்.

இது குறித்து, இந்துஸ்தான் சோஸலிஸ குடியரசு ராணுவ உறுப்பினராக இருந்தவரும், இலக்கியவாதியுமான யஷ்பால், தனது சுயசரிதையில் எழுதும்போது, ” ஆர்எஸ்எஸ் தலைவர் சர்வார்கரை பார்க்குமாறு ஆசாத்தை அனுப்பி வைத்தேன்.

ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்க சாவர்கர் சம்மதித்தார். ஆனால் நிபந்தனையும் விதித்தார். அதாவது, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை இந்துஸ்தான் சோசலிஸ குடியரசு ராணுவம் கைவிட வேண்டும் என்றும், ஜின்னா மற்றும் ஏனைய முஸ்லிம் தலைவர்களை கொல்ல வேண்டும் என்றும் சாவர்கர் நிபந்தனை விதித்தார். ஆனால், சாவர்கரின் நிபந்தனையை ஆசாத் ஏற்கவில்லை.

இந்த நபர் எங்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாக நினைக்கவில்லை, கூலிக்கு கொலை செய்பவர்கள் என்று நினைத்துவிட்டார். ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு சாவர்கர் எங்கள் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறார். நாங்கள் ஏன் முஸ்லிம்களை கொல்ல வேண்டும்? அந்த பணமே வேண்டாம் என்று சாவர்கரிடம் சொல் என்று என்னிடம் ஆசாத் தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

லாலா லஜ்பத் ராய், ஆஜாத் மற்றும் பகத்சிங் ஆகியோர் லாகூர் ஆங்கிலேய அதிகாரிகளால் திட்டமிட்டே கொல்லப்பட்டனர்.

இவ்வாறு ‘ஜனதா கா ரிப்போர்ட்டர்’ இணையத்தில் அம்ரேஷ் மிஸ்ரா எழுதியுள்ளார்.