‘சின்னத்தம்பி பாதுகாப்பு குழு’ தமிழகத்தில் முதன்முதலாக வனவிலங்கு பாதுகாப்பு குழு தொடக்கம்!

கோவை:

மிழகத்தில் முதன்முறையாக யாட்டு யானையான சின்னத்தம்பியை பாதுகாக்கும் நோக்கில், சின்னத்தம்பி பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இன்று சின்னதம்பியை பாதுகாக்க கோரி போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில்  வனப்பகுதியில் கடந்த சில நாட் களாக காட்டுயானை சின்னதம்பி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. அதை விரட்ட முயன்ற விவசாயி களையும், யானை மிரட்டியது. இதையடுத்து வனத்துறையினர், அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து டாப்சிலிப் மலைப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

ஆனால், சின்னத்தம்பி மீண்டும் ஒரே நாளில் தடாகம் பகுதிக்கு திரும்பியது. சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கடந்து பழைய இடத்திற்கே திரும்பியது. இதற்கிடையில் சின்னத்தம்பியுடன் சுற்றித்திரிந்த பெண்யானை உள்பட 3 யானைகள் ஊர்பகுதிகள் வந்து சின்னத்தம்பியை தேடிச்சென்றனது.

இந்த நிலையில் சின்னத்தம்பியும் மீண்டும் ஊருக்குள் வந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து சின்னத்தம்பியை  மீண்டும்  காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற முயற்சி செய்யப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசல் கூறினார்.

இதன் காரணமாக பதற்றம் அடைந்த வனவிலக்கு பாதுகாப்பு குழுவினர் மற்றும் கிராம மக்கள், சின்னத்தம்பியை காட்டுக்குள்ளேயே விட வேண்டும் என்றும், அதை கும்கியாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த வாரம் வாகனத்தில் ஏற்றப்பட்ட சின்னதம்பி

தங்களது எதிர்ப்பை அரசு தெரிவிக்கும் வகையில் முதன்முதலாக ‘சின்னத்தம்பி பாதுபாப்பு குழு’   வனவிலங்குகள் பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று  சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில்,  சமூக நீதிக்கட்சி, ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

சின்னத்தம்பியை கும்கியாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் வனப்பகுதியிலேயே விடவேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினார்கள்.