லக்னோ:
த்திரபிரதேச அரசு பெண் குழந்தைகளைக் காப்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரசாரம் செய்கிறதா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை பாஜ., எம்எல்ஏவும், அவரது மகனும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து, கைதான நபரை அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகின. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த செய்தியை காங்., எம்.பி., ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பெண் குழந்தைகளைக் காப்போம் பிரசாரம் எப்படி தொடங்கியது. ஆனால், குற்றவாளிகளைக் காப்போம் என்று போய்க்கொண்டிருக்கிறது,’ எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது:

பெண் குழந்தைகளைக் காப்போம் அல்லது கிரிமினல்களை பாதுகாப்போம். இதில் எந்தப் பிரசாரம், இயக்கம் யாருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச முதல்வர் கூறுவாரா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.