‘Save Delta’ என ஆஸ்திரேலியா டி20 போட்டியில் தமிழர்கள் பதாகை ஏந்தி வேண்டுகோள்

சிட்னி:

ந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது, அங்கு வசித்து வரும் தமிழர்கள், Save Delta என்று வாசகம் எழுதிய பதாகை ஏந்தி, தமிழகத்திற்கு உதவிடும் வகையில் கோரிக்கை விடுத்தனர்.

கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது  மைதானத்தில் தமிழக இளைஞர்கள் தமிழக விவசாயி களுக்கு ஆதரவாக பேனர் பிடித்தது போட்டியை காண வந்தவர்கள் மட்டுமின்றி போட்டியை ரசித்துக்கொண்டிருந்த உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிட்னியினில் நடைபெற்ற டி20 போட்டியில் தமிழர்கள் பதாகை பிடித்திருந்த காட்சி

கடந்த 15ந்தேதி  தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு டெல்டா மாவட்டம் பேரழைவை சந்தித்துள்ளது. கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். கஜா புயலுக்கு  12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான  தென்னை, வாழை, முந்திரி மரங்கள் உள்பட பல வகையான மரங்களும்  வேரோடு முறிந்து கிடக்கின்றன. ஏராளமான ஏக்கர் பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனமுடைந்த பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நிவாரண  பணிகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் சீரமைப்பு பணிகள் முடிய மேலும் பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடைந்துபோன மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு வருகிற்ன. இதற்கிடையில் அடிக்கடி மழையும் பெய்து வருவதால் நிவாரண பணிகளும் தொய்வடைந்து வருகிறது. மக்களும் தங்களக்கு சொந்த இடத்திற்கு  செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வை அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரணம் வழங்கியும், சீரமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்டா மக்களுக்கு உதவும் நோக்கில், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் அmந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20போட்டியின்போது, அதை காண வந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்,  விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்தை காப்பாற்றும் வகையில் பதாகைகள் ஏந்தினர்.  இந்த சம்பவம்  அங்கிருந்த வர்களின் கவனங்களை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பெரும்  ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

அவர்கள் கைதியில் வைத்திருந்த பேனரில், save delta, save tamilnadu farmers என எழுதப்பட்டிருந்தது.