சென்னையின் ‘ட்ராம்’ கம்பெனி மூடுவிழாவும்… ஜி. டி. நாயுடுவின் ‘பலே’ ஐடியாவும் !

பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, வழக்கமான சாலையில், இதர போக்குவரத்து தடைபடாமல், 24 கி. மீ வேகத்தில் ஊர்ந்து செல்லும் ‘ட்ராம்’ என்ற மின்சார ரயிலை இந்தியாவில் முதன் முதலாக [ Madras ] சென்னையில் 1895 மே 7 முதல் இயக்கியது !

பாரிஸ் கார்னர், ரிப்பன் பில்டிங், பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பகுதிகளில் மக்களை சுமந்து சென்றது !

தீர்க்க முடியாத கோரிக்கைகளை முன்வைத்து, சங்கம் ஒன்று போராடியது ! MGR உட்பட எல்லோரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர்  மத்தியில் ஆவேசமாகப் பேசினர் !

பிரிட்டிஷ் நிறுவனமான ‘ட்ராம்’ கம்பெனி, வேறு வழி தெரியாமல், கம்பெனி சொத்துக்களை அப்படியே அரசிடம் ஒப்படைத்துவிட்டு, 1953 ஏப்ரல் 12 அன்று, லண்டன் போய்விட்டது ! Company Closed ! 1000 தொழிலாளர்கள், வேலை பறிபோனது ! எல்லோரும் சித்தாள் வேலைக்கும் சுண்டல் விற்கவும் போனார்கள் !

‘டராம்’ கம்பெனியின் Main Tram Shed, இப்போது  தினத்தந்தி, மாலை மலர், பெரியார் திடல் உள்ள இடத்தில் இருந்தது ! அதை விற்றும், ரயில் தண்டவாளங்களை ஏலம்விட்டும் வந்த பணத்தை, யானை பசிக்கு, சோளப் பொரியாக, தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தனர் !

பெரியார் திடல், தினத்தந்தி Main Tram Shed  இடத்தை, ‘அதிசய மனிதர்’ G D நாயுடு லேசான விலைக்கு வாங்கி; அந்த சொத்தினை, இரண்டாகப் பிரித்து; ஒரு பாதியை, வாங்கிய விலைக்கு, சி.பா. ஆதித்தனாரிடம் விற்ற G D நாயுடு, மறு பாதி நிலத்தை, தந்தை பெரியாருக்கு, அன்பளிப்பாகக் கொடுத்தார் !

சென்னையில் மூடப்பட்ட ‘ட்ராம்’ கம்பெனி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் இயக்கியது ! இப்போது, கொல்கத்தாவில் மட்டும் ‘ட்ராம்’ மின்சார ரயில் மக்கள் விரும்பும் போக்குவரத்து சேவையாக நவீனப் படுத்தப்பட்டு, நடக்கிறது !

ஆம்ஸ்டர்டாம், லண்டன், அடிலாய்டு, லக்சம்பர்க், பார்சிலோனா உள்ளிட்ட அழகிய நகரங்களில் அழகழகாக கலர் கலராக ஓடிக்கொண்டிருக்கும் ‘ட்ராம்’ மின்சார ரயில்கள், அந்த நகரங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் விருப்பத் தேர்வாக இப்போதும்  இருக்கிறது !

சென்னையில்  மெட்ரோ ரயில் நஷ்டத்தில் இயங்குகிறது ! இனிமேல்தான் லாபம் பார்க்கணும் ! ஆனால், போகிற போக்கை பார்த்தால், 1953ல் ‘ட்ராம்’ கம்பெனிக்கு வந்த
Danger வரும்போல் தெரிகிறது !

“சென்னை மெட்ரோ ரயில் சேவை தனியார் வசம்  போகாமல் தடுப்பது எப்படி ?” என்ற
தலைப்பை பேசு பொருளாக்கி, T V களில் விவாதம் நடத்தலாம் !

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-