‘தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்!’ இயக்குனர் சங்கர்

சென்னை,

சினிமாவுக்கு ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுன்னது. இதன் காரணமாக சினிமா தொழில் அழிந்துவிடும் என்று பிரபல இயக்கநர் சங்கர் கூறி உள்ளார்.

வரியை குறைத்து, தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாதம் 1ந்தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் ஜிஎஸ்டி-யால் சினிமாவுக்கு அதிகப்பட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, திரையுலகினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘இந்த வரி விதிப்பு அதிகமானது என்றும், சினிமாவுக்கு 58 சதவிகிதம் வரியா? இது அதிகபட்சமானது. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.