சென்னை

ருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சில சேமிப்புக்கள் 80 சி  பிரிவின் கீழ் உள்ளன.   அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும்.    அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்

1.       ஆயுள் காப்பீட்டு  பிரிமியம்

2.       பொது பிரவிடண்ட் ஃபண்ட்

3.       ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்

4.       சுகன்யா சம்ரிதி திட்டம்

5.       தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)

6.       வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை

7.       முதியோர் சேமிப்பு திட்டம்

8.       யுனிட்டுகள் மூலம் காப்பீடு

9.       முதலீட்டு சேமிப்புக்கள்

10.     ஓய்வூதியம்

11.     குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்கு மட்டும்)

12.     வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்

இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.   அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும்.  எனவே இவை குறித்து உங்கள் நிதி ஆலோசகரின் அறிவுரையின் படி சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு  பெற முடியும்.